சனி, 30 ஜனவரி, 2010

இது காலத்தின் கட்டளை!! டும் டும் டும்

தமிழில் எழுத வேண்டும் என்ற ஆவல் நீண்ட நாட்களாய் இருந்த போதும் என்றுமே அதற்க்கான முயற்சி செய்ததில்லை. தமிழில் ஒரு பதிவு என்பது வெறும் கற்பனயகவே இருந்துவிட்டது . இன்னொரு முக்கியமான காரணம் தமிழில் எழுதும் போது பிழை இல்லாமல் எழுத வேண்டும் என்ற கவலையும் கூட. ஆனால் இன்று ஏதோ ஒரு உந்தலால் இந்த பதிவை துவக்குகிறேன். என்ன எழுதி கிழிக்க ...மன்னிக்கவும் என்ன எழுதி பதிக்க போகிறேன் என்பதை பற்றி ஒரு தீர்மானமான முடிவு செய்யவில்லை. இருந்தாலும் எனக்கு பிடித்த சில பலவற்றை பற்றி கிறுக்கவே இந்த பதிவு. என் வாழ்வில் நடந்ததை பார்த்தால் ,எல்லா நிகழ்வுகளிலும் காலத்தின் பங்கு மிக மிக அதிகமாக இருந்து இருக்கிறது. எனக்கு என்று மட்டும் அல்ல எல்லோருக்கும் இந்த கருத்து ஏற்று கொள்ள கூடியதாக இருக்கும் என்றே நினைக்கின்றேன். நான் எழுதுவதையும் படிக்கவேண்டும் என்பது உங்கள் விதியா அல்லது காலத்தின் கட்டளையா ... உங்கள் யூகங்களுக்கே விட்டு விடுகின்றேன்.

எல்லா ..அல்லது வலை உலகில் பெரும்பான்மையாக பதிவர்கள்  தமிழில் எழுத "Inspiration" - ஆக இருக்கும் மறைந்த திரு சுஜாதா அவர்களுக்கு எனது இந்த வலை பதிவுகளை (நானும்) சமர்ப்பணம் செய்கின்றேன்
"Start Mujik"
டும் டும் டும் டும்....!!!1
இதனால் சகல வலை உலக மக்களுக்கு(netizens) தெரிவிப்பது என்னவென்றால் , இன்று 2010 சனவரி 31- நாள் முதல் காலத்தின் கட்டளை எனும் இந்த வலை பதிவு தொடங்குகிறது. வாசகர்கள் அனைவரும் மறக்காமல் வந்து படித்து , தங்கள் கருத்துகளை பதிவு செய்யும் படி கேட்டு கொள்ளபடுகிறார்கள்.. எல்லோரும் வாங்க !! எல்லோரும் வாங்க !! ..
டும் டும் டும் !!!
அனுமதி இலவசம் ..
படித்தால் பரவசம் !!
பதிப்போம் நவரசம் !!!
ஜீரணிக்க இருக்கு மிளகு ரசம்..!!!
டும் டும் டும் !!!!
 ____________________________________________________________________________________________
 குறள்:
எண்ணித் துணிக கருமம்  துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. [ 47 : 7 ]
----------------------------------------------------------------
பொருள் :
கண்ணா ! ஒரு வேலைய "Start"  செய்யற முன்னாடி 108 இல்ல 1008 இல்ல லக்ஷம் தடவ யோசிக்கணும் , "Plan"  பண்ணனும் .. ஆனா முடிவு செஞ்சி ஆரம்பிச்ச அப்பறோம் ..இது நல்ல வருமா? ..இது சரியா? இது ஆரம்பிச்சி இருக்க  கூடாதோ  நு சொல்லி யோசிக்க கூடாது ...
__________________________________________________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக