இன்று ஒரு தகவல்:தினசரி வாழ்க்கையில் எப்படி இயற்கைக்கு சாதகமாக நடந்து கொள்வது
நம் தினசரி வாழ்க்கையில் எப்படி இயற்கைக்கு சாதகமாக நடந்து கொள்வது என்று பார்க்கலாம்.
- உபயோகிக்காத விளக்கு , மின் விசிறி மற்றும் பல மின் சாதனங்களை அணைத்து விடுங்கள் ... மொத்தமாக (ஸ்டாண்ட் பையில் போடவேண்டோம்)
- கூடியவரை காகிதத்தை உபயோகப்படுத்த வேண்டாம் ... அப்படி உபயோக படுத்த வேண்டி இருந்தால் இருபக்கமும் உபயோகிக்கவும்
- கடைக்கு சென்று வருகையில் கூடுமான வரை நீங்களே கையில் பையை கொண்டு செல்லுங்கள் .. முக்கியமாக கடைகரர் கொடுக்கும் பிளாஸ்டிக் பையை உபயோகிக்காதீர் ...
- தண்ணீரை கவனமாக உபயோகிக்கவும் .. தேவை இல்லாமல் தண்ணீரை செலவழிக்க வேண்டாம்.. (எப்பவுமே )முடிந்தவரை ரீ சைக்கிள் / ரெடுயுஸ் / ரீ யூஸ் ... :)
- நடை, சைக்கிள், பைக் , பஸ், கார் பூலிங், இவை அனைத்தும் சரி வரவில்லையெனில் உங்கள் சொந்த காரை வெளியே எடுங்க
உலகத்தை சுகாதரமா வைக்க ஏதோ நம்மால் ஆனதை செய்யுங்கள் ...
குறள்:
“எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”
------------------------
பொருள்:
என்ன விஷயமா இருந்தாலும் இவன் சொன்னான் அவன் சொன்னான் அப்பிடினு நம்பிடாம, அல்லது இந்த புத்தகத்திலே இருக்கு, அந்த புத்தகத்திலேஇருக்கு அப்படினு நம்பிவிடாமல் அதில் எந்த அளவுக்கு உண்மையிருக்குனு ஆராய்ந்து பார்த்து பிறகுதான் முடிவுக்கு வரணும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக